ஆந்திரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டுகள்
June 26 , 2026 79 days 131 0
திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள சதாசிவகோனாவில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று அரிய கல்வெட்டுகளை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் விஜயநகர மன்னர் சதாசிவ ராயரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் இவை கி.பி. 1554 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதியிட்டவை ஆகும்.
இவை தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன; இது விஜயநகர நிர்வாகத்தின் பன்மொழித் தன்மையைக் காட்டுகிறது.
இக்கல்வெட்டுத் தகவல்கள், பாபவிநாசத்தில் ஒரு சிவன் கோவில் மற்றும் மடம் கட்டப் பட்டதையும், கோவில் வழிபாட்டிற்கான நில மானியங்களையும் பதிவு செய்கின்றன.
குடிமல்லம் கோவில் (பரசுராமேஸ்வரர் கோவில்) நிலங்களை மதச் சேவைகள் மற்றும் அன்னதானத்திற்காக ஒதுக்கியது குறித்தும் இவை குறிப்பிடுகின்றன.