ஆந்திரப் பிரதேசத்தில் சதுப்பு நிலக்காடுகள் மறுசீரமைப்பு
July 31 , 2026 13 hrs 0 min 21 0
மிஷ்டி (MISHTI) திட்டத்தின் கீழ் சதுப்பு நிலக்காடுகளை மீட்டெடுப்பதில் இந்திய மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் ₹18.04 கோடி முதலீட்டில் 2,047.70 ஹெக்டேர் அளவிலான சதுப்பு நிலக்காடுகளை மாநில அரசு மீட்டுள்ளது.
கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பல்லுயிர்த் தன்மையை வலுப்படுத்த, ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய பசுமைச் சுவர் முன்னெடுப்பின் கீழ் சதுப்பு நிலக்காடுகளின் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓத நீரின் ஓட்டத்தை மேம்படுத்தவும், சதுப்பு நிலக்காட்டின் மரங்களின் உயிர் வாழ்வை அதிகரிக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மீள்திறனை மேம்படுத்தவும் வனத் துறை மீன் எலும்புத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டிற்கு, மாநிலம் முழுவதும் 1,618 ஹெக்டேர் சதுப்பு நிலக்காடுச் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க ஆந்திரப் பிரதேசம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மிஷ்டி திட்டமானது சதுப்பு நிலக்காடுகளை வளர்த்தல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்தல், பருவநிலையைத் தாங்கும் திறன் மற்றும் கடலோரப் பகுதிகளில் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.