TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசம் - தனி உயர் நீதிமன்றம்

November 11 , 2018 2430 days 927 0
  • ஆந்திரப் பிரதேசத்திற்கு என்று தனியாக ஒரு உயர் நீதிமன்றம் செயல்படுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது. இந்த உயர் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படவிருக்கிறது.
  • நாட்டின் 25வது உயர்நீதிமன்றமாக இந்த உயர் நீதிமன்றம் விளங்கும்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகரான அமராவதியில் உயர்நீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் அமைக்கும் வரை தற்காலிக கட்டிடத்தில் இந்த உயர் நீதிமன்றம் செயல்படும்.
  • 2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் பொதுவான ஹைதராபாத்தில் அமைந்திருந்த உயர் நீதிமன்றம் ஒன்றை கொண்டு இருந்தது.
  • தற்பொழுது செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்