ஆபத்தான கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper Virus - CDV) வைரசிற்கு எதிரான தடுப்பூசி
October 9 , 2018 2463 days 998 0
குஜராத் வனத்துறையானது கிர் சரணாலயத்தில் ஆபத்தான கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV ) மற்றும் புரோட்டோசோவா தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்காக சிங்கங்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்கியுள்ளது.
இந்த வைரஸானது குஜராத்தின் கிர் சரணாலயத்தில் குறைந்தபட்சம் 23 சிங்கங்களின் மரணத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கடைசி கணக்கெடுப்பின்படி கிர் சரணாலயத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.
உலகின் ஆசிய சிங்கங்களின் ஒரே வனவாழ்விடம் கிர் சரணாலயம் ஆகும்.
CDV ஆனது எளிதில் தொற்றக்கூடியதாகும். இது விலங்குகளின் இரைப்பை, சுவாசமண்டலம், மத்திய நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளைத் தாக்குகிறது.
CDV ஆனது மிகவும் ஆபத்தான வைரசாக கருதப்படுகிறது. மேலும் இது கிழக்கு ஆப்பிரிக்க காடுகளின் 30% ஆப்பிரிக்க சிங்கங்களின் அழிவிற்கு காரணமாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.