TNPSC Thervupettagam

ஆபத்தான நிலையில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களின் பட்டியல் 2026

July 31 , 2026 13 hrs 0 min 33 0
  • தென்கொரியாவின் பூசானில் நடைபெற்ற 48வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் போது, யுனெஸ்கோ ஆறு இடங்களை ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • ஆபத்தான பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட மூன்று உலகப் பாரம்பரிய இடங்கள் போமா-படிங்கிலோ வலசைப்போகும் நிலப்பரப்பு (தெற்கு சூடான்), மவுண்ட் அமேல் கோட்டைகள் (லெபனான்) மற்றும் செபாஸ்டியா (பாலஸ்தீன அரசு) ஆகும்.
  • ஆபத்தான பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏற்கனவே உள்ள மூன்று உலகப் பாரம்பரிய இடங்கள் பழங்கால நகரமான டாரிக் செர்சோனீஸ் மற்றும் அதன் சோரா (உக்ரைன்), வரலாற்றுச் சிறப்புமிக்க உள் நகரமான பரமரிபோ (சுரினாம்) மற்றும் டயர் (லெபனான்) ஆகியனவாகும்.
  • தீவிரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இடங்களைப் பாதுகாப்பதற்காக, ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியல் உலகப் பாரம்பரிய மாநாட்டின் (1972) கீழ் உருவாக்கப்பட்டது.
  • ஆயுத மோதல்கள், பருவநிலை மாற்றம், வேட்டையாடுதல், வனவிலங்கு கடத்தல், மாசுபாடு, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்