ஆபத்து நிலையில் உள்ள உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியல்
December 4 , 2022 1019 days 490 0
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) மற்றும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய மையம் (WHC) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையானது, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்பு பவளத் திட்டுகளின் (GBR) நிலை குறித்து கவலைக்கிடமான தகவலைத் தெரிவித்தது.
அந்த அமைப்புகள் "ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் இதனைச் சேர்க்க வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளன.
இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் அமைந்துள்ளது.
பெருந்தடுப்பு பவளத் திட்டு என்பது 2,900 தனிப்பட்ட திட்டுகள், 900 தீவுகள் மற்றும் தோராயமாக 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும்.
இது உலகின் மிகப்பெரிய பல்லுயிர் மையங்களில் ஒன்றாகும் என்பதோடு, உலகின் மிகப்பெரிய கார்பன் உட்கவர் அமைப்புகளில் ஒன்றாகவும் இது உள்ளது.