மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது ஆபத்துக் காப்பான்களுக்கான திட்டம் ஒன்றினைத் தொடங்கியது.
இந்தத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று தொடங்கி 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்தத் திட்டத்தின்கீழ், விபத்து நடந்த சில மணி நேரத்திற்குள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.5,000 பரிசுத் தொகையானது (ஒவ்வொரு விபத்திற்கும்) வழங்கப்படும்.
ஒவ்வொரு விபத்திலிருந்தும் காப்பவருக்கு சன்மானம் வழங்குவதோடு தகுதியுடைய ஆபத்துக் காப்பான்களுக்கு 10 தேசிய அளவிலான விருதுகளையும் அமைச்சகம் வழங்க உள்ளது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,00,000 பரிசுத் தொகையானது வழங்கப்படும்.
ஒரு தனிநபரான ஆபத்துக் காப்பானிற்கு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 5 முறை சன்மானம் வழங்கப்படும்.