ஐ.நா. பாதுகாப்புச் சபையானது, ஆப்கானிஸ்தானிற்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டத்திற்கான உத்தரவை 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 வரையில் ஓர் ஆண்டிற்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவான தங்களது உத்தரவுகளை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் முன்னோக்கிக் கொண்டு செல்வார் என தீர்மானம் 2626 முடிவு செய்துள்ளது.