TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா உதவி

January 4 , 2022 1236 days 612 0
  • ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் பிடியில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரம் விழுந்ததிற்குப் பிறகு, முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பரிசாக 5 லட்சம் கோவாக்சின் மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது.
  • ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் தாலிபன்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா வழங்கும் 2வது உதவி இதுவாகும்.
  • முன்னதாக டிசம்பர் 11 அன்று 1.5 டன்கள் மருந்து கொண்ட சரக்குப் பெட்டகமானது அனுப்பப் பட்டது.
  • இதற்கு முன்பு, பாகிஸ்தான் வழியாக 50,000 டன் கோதுமை அடங்கிய சரக்குப் பெட்டகத்தினை அனுப்பிட இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • எனினும் தாலிபன் அரசின் நிர்வாகத்தினை ஒரு அரசுமுறை ஆட்சியாக இதுவரையில் இந்தியா அலுவல்முறையில் அங்கீகரிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்