ஆப்பிரிக்க வனம் மற்றும் சவானா (புல்வெளி) யானைகளின் எண்ணிக்கை குறைவு
March 29 , 2021 1756 days 1358 0
ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் “மிகவும் அருகி வரும் இனங்களாக” சேர்க்கப் பட்டு உள்ளன.
ஆப்பிரிக்க சவானா புல்வெளி யானைகள் “அருகி வரும் இனங்களாக” சேர்க்கப் பட்டு உள்ளன.
இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature – IUCN) அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் மீதான சிவப்புப் பட்டியலால் செய்யப் பட்டுள்ளது.
இந்த இரு இனங்களும் இதற்கு முன்பு ‘பாதிக்கப்படக் கூடியவையாக’ கருதப் பட்டன.
மேலும் அவை இதற்கு முன்பு சிவப்புப் பட்டியலில் ஒரே இனமாகக் கருதப் பட்டது.
IUCN அமைப்பின் கூற்றுப் படி புதிய மரபணுச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுக் கொண்டு இருப்பதால் இந்த இரு இனங்களும் தனித்தனியே மதிப்பிடப் படுகின்றன.
கூடுதலாக, காட்டு யானைகள் மத்திய ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்வதால் அவை அரிதாகவே ஒன்றையொன்று சந்திக்கின்றன.
சவானா (புல்வெளி) யானைகள் புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களைக் கொண்ட ஆப்பிரிக்காவின் துணை சஹாராப் பகுதிகளின் திறந்தவெளிகளில் வாழ்கின்றன.
கடந்த 31 வருடங்களில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்து உள்ளது.
மேலும் IUCN அமைப்பின் கூற்றுப் படி, கடந்த 50 வருடங்களில் ஆப்பிரிக்க சவானா யானைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது.
இரு இனங்களும் ஒரு சேர சுமார் 4,15,000 யானைகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.
தந்தத்திற்காகக் கடத்தப் படுதல் மற்றும் அவற்றின் இருப்பிடங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றப் படுதல் ஆகியவற்றால் இத்தகைய எண்ணிக்கை குறைபாடு உண்டாகிறது என காரணம் கூறப் படுகிறது.
இந்த மாற்றங்கள் 2008 ஆம் ஆண்டிலிருந்து நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.