ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான நிரந்தர மன்றம்
August 5 , 2021
1471 days
616
- ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான ஒரு நிரந்தர மன்றத்தினை நிறுவுவதற்கான தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த நிரந்தர மன்றமானது இனவாதம், இனவெறி, இனப்பாகுபாடு மற்றும் சகிப்புத் தன்மையின்மை குறித்த சவால்களை எதிர்கொள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும்.
- இந்த தீர்மானமானது 193 உறுப்பினர்கள் கொண்ட உலக அமைப்பின் ஒருமித்த கருத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இந்தப் புதிய மன்றமானது 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
- அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் 5 உறுப்பினர்கள் இதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மற்ற 5 உறுப்பினர்கள், பிராந்தியக் குழுக்கள் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் அமைப்புகளின் ஆலோசனையுடன் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப் படுவர்.
Post Views:
616