ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்தினைப் பாதுகாக்க வனவிலங்குப் பத்திரம்
March 27 , 2022 1240 days 510 0
அருகி வரும் உயிரினமான கருப்பு காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கான தென் ஆப்பிரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக உலக வங்கியானது (சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி) ஒரு வனவிலங்குப் பாதுகாப்புப் பத்திரத்தினை வெளியிட்டுள்ளது.
இது “காண்டாமிருகப் பத்திரம் ” எனவும் அழைக்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு பாதுகாக்கப்பட்டப் பகுதிகளிலுள்ள கருப்பு காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தச் செய்வதற்கும் இந்தப் பத்திரம் உதவி வழங்கும்.
அந்த இரு பகுதிகளாவன - அடோ யானை தேசியப் பூங்கா மற்றும் கிரேட் ஃபிஷ் இயற்கை நதி வளங்காப்பகம் ஆகியனவாகும்.