TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கச் சாம்பல் கிளி வர்த்தகம்

November 25 , 2025 2 days 45 0
  • ஆப்பிரிக்கச் சாம்பல் கிளிகளுக்கு பதிவு செய்யப்பட்ட வளர்ப்பாளர்கள் அல்லது அங்கீகரிக்கப் பட்ட செல்லப்பிராணிக் கடைகள் எதுவும் நாட்டில் இல்லை என்று சமீபத்திய RTI பதில்கள் காட்டுகின்றன.
  • இந்தப் பறவையானது அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் (CITES) முதலாம் இணைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, எனவே இதற்குச் சிறப்பு வர்த்தகம் மற்றும் இறக்குமதி அனுமதிகள் தேவையாகும்.
  • இது IUCN அமைப்பினால் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • 19 மாநிலங்களில், கேரளா மட்டுமே PARIVESH (ஊடாடும், முறையான மற்றும் சுற்றுச் சூழல் ஒற்றை-சாளர மையத்தால் சார்பு நிலைச் செயல்பாட்டு மற்றும் நடவடிக்கை எடுக்கக் கூடிய மையம்) வலைதளத்தில் 17 இனப்பெருக்க உரிம விண்ணப்பங்களைப் பெற்றது.
  • உரிமையாளர்கள் இந்தப் பறவையை 2024 ஆம் ஆண்டு உயிர் வாழும் விலங்கு இனங்கள் பதிவு விதிகளின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்பதோடு மேலும் இந்த இனம் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் IV ஆம் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • இந்த இனத்தை இனப்பெருக்கம் செய்ய அந்த நபர்கள் அப்பறவையின் இனப்பெருக்க உரிமம், CITES இறக்குமதி அனுமதி, DGFT (வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம்) இறக்குமதி உரிமம் மற்றும் தலைமை வனவிலங்குக் காப்பாளரிடமிருந்து NOC (தடையில்லாச் சான்றிதழ்) பெற வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்