mpox தொற்று ஆனது ஆப்பிரிக்காவில் இனி சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாகக் கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காங்கோ மற்றும் அருகிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் பரவுதல் உட்பட நெருங்கிய தொடர்பு மூலம், புதிய வகையான mpox வைரஸ் பரவத் தொடங்கியது.
சம்பந்தப்பட்ட வைரஸ் மாற்றுரு, புருண்டி, உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மிகவும் கடுமையானதாகவும், பரவலாகவும் காணப்பட்ட கிளேட் I வகையைச் சேர்ந்தது.
mpox வைரஸின் Clade II ஆனது, அமெரிக்கா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான தினசரிப் பாதிப்புகள் பதிவாகியதுடன் 2022 ஆம் ஆண்டில் உலகளாவியப் பெருந் தொற்றினை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்தச் சோதனைத் திறன் ஆகியவை பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவுக்கு வழி வகுத்தன.