TNPSC Thervupettagam

ஆப்பிள் டெய்லி தினசரி இதழின் கடைசி அச்சு பதிப்பு

June 29 , 2021 1501 days 610 0
  • ஆப்பிள் டெய்லி எனப்படும் தினசரிப் பத்திரிக்கையினுடைய கடைசி அச்சு பதிப்பின் 1 மில்லியன் இதழ்கள் ஹாங்காங்கில் விற்கப்பட்டன.
  • ஹாங்காங் காவல் துறையினர் அதன் அலுவலகத்தினை ஆய்வு செய்து அதன் 5 முன்னணி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளைக் கைது செய்து, 2.3 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கியதைத் தொடர்ந்து அந்த நாளிதழ் நிறுவனமானது தனது இயக்கத்தை (பணிகளை) நிறுத்தப் போவதாக கூறி உள்ளது.
  • இந்தப் பத்திரிக்கை தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்டு  இருப்பதாக ஹாங்காங் காவல் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
  • சமீப ஆண்டுகளாக இந்தப் பத்திரிக்கையானது ஹாங்காங் நகர மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் பற்றி விமர்சனங்களைத் தெரிவிக்கும் வகையில் பெருமளவில் வெளிப்படையாக இயங்கி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்