தாய்மொழியில் ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியை வழங்குவதற்காக ஒடிசா அரசு ‘ஆமே பதிபா ஆமா பசாரே’ திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டம் 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கான ஐந்து ஆண்டு முயற்சி ஆகும்.
இது முதலில் கியோஞ்சர், காந்தமால், கஜபதி, ராயகடா, நபரங்பூர் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
முண்டா, குய், சௌரா, குவி, கோண்டி மற்றும் கோயா போன்ற பழங்குடியின மொழிகளில் கற்பித்தல் செய்யப்படும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மொழி சார்ந்தப் பயிற்சி மற்றும் கற்றல் நூல்களைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் அரசியலமைப்பின் சரத்து 350A (ஆரம்பக் கல்வி நிலையில் தாய்மொழியில் பயிற்றுவித்தல்) ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது.