தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலிவ் ரிட்லி ஆமையானது, இலங்கை முகடு (Sri Lanka Dome) பகுதியை நோக்கி வலசை போயுள்ளது/இடம்பெயர்ந்துள்ளது.
செயற்கைக்கோள் தொலை அளவியல் ஆய்வின் கீழ், ஆமைகளுக்கு அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டு சென்னை கடற்கரையில் விடுவிக்கப்பட்டன.
ஆமைகளின் வலசை போதல், முட்டையிடுதல் மற்றும் அவற்றின் நகர்வு முறைகளைக் கண்காணிப்பதற்காக, இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இலங்கை முகடு என்பது கடலடி நீர் மேலெழும்பும் பருவகாலப் பகுதியாகும், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீரைக் கொண்டு வருவதால், மிதவை உயிரினங்கள், மீன்கள், திமிங்கிலங்கள் மற்றும் ஆமைகளை ஈர்க்கிறது.
இப்பகுதி மே மாதத்தில் உருவாகி, ஜூலை மாதத்தில் உச்சத்தை அடைந்து, செப்டம்பர் மாதத்திற்குள் குறைகிறது, இதனால் இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய உணவுப் பகுதியாகத் திகழ்கிறது.