மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆயுதங்கள் (திருத்த) மசோதா, 2019ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்ற ப்பட்டது.
இந்த மசோதாவானது ஆயுதங்கள் சட்டம், 1959ல் திருத்தம் செய்ய முயல்கின்றது.
இந்த மசோதாவானது தற்போது ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைக்கும் வகையில் திருத்தப் பட்டுள்ளது.
மேலும் இந்த மசோதாவானது புது வகையான குற்றங்களையும் அறிமுகப் படுத்துகின்றது.
அம்சங்கள்:
துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தின் காலக்கெடுவானது மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகின்றது.
உரிமம் பெறாத துப்பாக்கிகளைத் தடை செய்தல்.
இந்த மசோதாவானது பின்வரும் புதிய குற்றங்களைச் சேர்க்கின்றது – சிறைத் தண்டனையுடன் கூடிய தண்டனை.
காவல் துறை அல்லது ஆயுதப் படையினரிடமிருந்து துப்பாக்கிகளை வலுக் கட்டாயமாகப் பறித்துக் கொள்ளுதல்.
கொண்டாட்டத்தின் போது நடத்தப்படும் துப்பாக்கிச் சுடுதலானது மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்.