2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியிலிருந்து ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தினைக் கலைப்பதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவானது 1775 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனமான ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தினை ரத்து செய்யும்.
அக்டோபர் 01 ஆம் தேதிக்குப் பிறகு இந்த வாரியத்தின் சொத்துக்கள், ஊழியர்கள் மற்றும் அதன் மேலாண்மை ஆகிய அனைத்தும் புதிதாக நிறுவப்பட்ட ஏழு பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படும்.