TNPSC Thervupettagam

ஆயுதப் படைகளில் உள்நாட்டு நாய்கள்

February 19 , 2026 4 days 50 0
  • அஸ்ஸாம் ரைபிள்ஸ், 2050 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு டாங்குல் ஹுய் மற்றும் கோம்பை நாய் இனங்களை அதன் நாய்ப் படையில் சேர்த்து, வெளிநாட்டு இனங்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
  • 1835 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அசாம் ரைபிள்ஸ், இந்தியாவின் பழமையான துணை ராணுவப் படையாகும் என்பதோடு உள்துறை அமைச்சகம் (நிர்வாகக் கட்டுப்பாடு) மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் (செயல்பாட்டுக் கட்டுப்பாடு) கீழ் இது செயல்படுகிறது.
  • ஆயுதப்படைகளின் நாய்ப் படைகளில் இந்திய நாய் இனங்களை ஊக்குவிப்பதற்காக உள்துறை அமைச்சகம் 2025 ஆம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது.
  • தங்குல் ஹுய் இனம் மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தைச் சேர்ந்தது மற்றும் நோய் எதிர்ப்பு மற்றும் வேட்டையாடும் திறனுக்கு பெயர் பெற்றது.
  • கோம்பை இனம் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது மற்றும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு ஏற்றதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தப் படையில் தற்போது 253 நாய்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் மிகவும் முக்கியமாக பெல்ஜிய மாலினாய்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் லாப்ரடோர் ஆகியவை அடங்கும் என்பதோடு இவற்றின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 344 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்