ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அதிகார விரிவாக்கம்
October 10 , 2022 1179 days 511 0
மத்திய அரசு அருணாச்சலப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களிலும், நாகாலாந்தின் ஒன்பது மாவட்டங்களிலும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அதிகாரத்தினை (AFSPA) மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆனது "கலகம் நிறைந்தப் பகுதியில்" ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதைத் தடை செய்யும் அதிகாரத்தை ஆயுதப் படைகளுக்கு வழங்குகிறது.
சட்டம் ஒழுங்கை மீறும் பட்சத்தில் உரிய எச்சரிக்கைக்குப் பிறகு பாதுகாப்புப் படை தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தவும் இச்சட்டம் அனுமதிக்கிறது.