ஆயுதப்படை ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்தியா மூன்று கூட்டுக் கோட்பாடுகளை வெளியிட்டது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவினரிடையே ஒருங்கிணைந்த இயங்குந்தன்மையை மையமாகக் கொண்ட சிறப்புப் படைகளின் (SF) செயல்பாட்டுக் கோட்பாட்டை CDS வெளியிட்டுள்ளது.
SF கோட்பாட்டில் கூட்டுப் பயிற்சி, பயிற்சிப் பள்ளிகளைக் கூட்டுப்படைப் பயிற்சி நிறுவனங்களாக மேம்படுத்துதல் மற்றும் நடைமுறைகளைச் சீர் தரப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் செயல்பாட்டுத் தயார்நிலைக்கான கூட்டுப் பயிற்சியை மேம்படுத்தவும் வான்வழி மற்றும் ஹெலிபோர்ன் நடவடிக்கைகளுக்கான ஒரு கோட்பாடு வெளியிடப்பட்டது.
நிலம், கடல், வான்வழி, விண்வெளி மற்றும் இணையவெளிக் களங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான பல்துறைச் செயல்பாட்டுக் கோட்பாட்டைப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கூட்டு உத்திகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு நெகிழ்திறன் மிக்க, விரைவு திறனுடைய படையை உருவாக்குவதே இந்த கோட்பாடுகளின் நோக்கமாகும்.
இந்த ஆவணங்கள் இந்தியாவின் ஆயுதப் படைகளின் எதிர்காலக் கூட்டுத் திட்டமிடல், செயலாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.