ஆயுஷ் கட்டமைப்புத் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்காக ஆயுஷ் அமைச்சகத்துக்குத் தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவை அளிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது ஆயுஷ் தகவல், சிறந்த ஆராய்ச்சி, கல்வி, பல்வேறு சுகாதார நலத் திட்டங்களை வழங்குதல் மற்றும் சிறந்த மருந்து ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் டிஜிட்டல் மயமாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மத்திய ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகமானது இணை அமைச்சரான (தனிப் பொறுப்பு) ஸ்ரீபத் நாயக் தலைமையில் செயல்படுகின்றது.