TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்

December 4 , 2023 1049 days 744 0
  • தற்போதுள்ள ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களை (AB-HWCs) ‘ஆரோக்யம் பர்மம் தானம்’ என்ற அடையாள முழக்கத்துடன் ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என மறுபெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பிலிருந்து முழு அளவிலான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இது தடுப்பு, உடல் நல மேம்பாடு, குணப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது இரண்டு கூறுகளை உள்ளடக்கியது.

முதல் கூறு

  • சமூக அளவில் ஆரோக்கியம் மற்றும் பரந்த அளவிலான சேவைகளை வழங்கும் நோக்கில் இலவச விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பிற்காக 1,50,000 சுகாதாரம் மற்றும் நல மையங்கள் (HWCs) உருவாக்கம்.

இரண்டாவது கூறு

  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டமானது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்காக 10 கோடிக்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையான சுகாதாரக் காப்பீட்டினை வழங்குகிறது.
  • சுகாதாரம் மற்றும் நல மையங்கள் ஆனது தொற்றாத நோய்கள், நோய்த்தடுப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சை, வாய்வழி, கண் மற்றும் காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை, மனநல ஆதரவு மற்றும் அவசரநிலை மற்றும் அதிர்ச்சிக்கான ஆரம்ப கட்ட சிகிச்சை, இலவச அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்