TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்துடன் இ-சஞ்சீவனி திட்டம் ஒருங்கிணைப்பு

June 7 , 2022 1169 days 779 0
  • தேசிய சுகாதார ஆணையமானது, மத்திய அரசின் ‘இ-சஞ்சீவனி’ தொலைதூர மருந்து வழங்கீட்டுச் சேவையானது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் என்ற திட்டத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாக அறிவித்தது.
  • இந்த ஒருங்கிணைப்பானது இ-சஞ்சீவனி பயனாளிகள் தமது ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளை எளிதாக உருவாக்க உதவும்.
  • பயனாளிகள் தங்களின் தற்போதையச் சுகாதாரப் பதிவுகளை ஒன்றோடொன்று இணைக்கவும் அவற்றை முறையாக நிர்வகிக்கவும் இதைப் பயன்படுத்த முடியும்.
  • பயனாளிகள் தங்கள் உடல்நலப் பதிவுகளை இ-சஞ்சீவனி என்ற சேவை மூலம் மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது வழி வகுக்கும்.
  • இது மருத்துவம் சார்ந்த சிறப்பான முடிவினை மேற்கொள்ளவும், மருத்துவச் சிகிச்சை வழங்கீட்டின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் உதவும்.
  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டமானது, இந்தியாவில் தற்போதுள்ள டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகள் மற்றும் பங்குதார நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் முயற்சியில் டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்