பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்ற மாதிரி திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.
இந்த முதன்மையான முன்னெடுப்புகளானது,
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனித்துவமான சுகாதார அடையாள அட்டையை உருவாக்குதல் மற்றும்
டிஜிட்டல் சுகாதார நல நிபுணர்கள் மற்றும் சுகாதாரநல வசதிகள் ஆகியோரைக் கொண்டுள்ள பதிவேட்டினை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நாடு தழுவிய தொடக்கமானது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவுடன் ஒத்துப் போகிறது.