ஒடிசா மற்றும் டெல்லி ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) திட்டத்தில் இணைந்துள்ளதுடன் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளன.
2018 ஆம் ஆண்டு முதல், 42.48 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, 10.98 கோடி மருத்துவமனை சேர்க்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன மற்றும் 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (ABDM) 84.35 கோடி ABHA (ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு) கணக்குகளை உருவாக்கி 80.66 கோடி சுகாதாரப் பதிவுகளை இணைத்து, டிஜிட்டல் சுகாதாரப் பதிவு பகிர்வை செயல்படுத்துகிறது.
94.19 லட்சம் முதியோர்கள் பதிவு செய்துள்ள ஆயுஷ்மான் வய வந்தனா 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச சிகிச்சையை வழங்குகிறது.
AIIMS டெல்லி, PGIMER சண்டிகர் மற்றும் AIIMS ரிஷிகேஷ் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் சுகாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன, இதில் நோய் கண்காணிப்பு, காசநோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ முடிவு ஆதரவுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள் அடங்கும்.