இந்தத் தினமானது, ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் நன்மைகள் குறித்த ஒரு விழிப்பு உணர்வை பரப்புவதற்காக அனுசரிக்கப்பட்டது.
இந்த மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம் ஆனது, இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகும்.
இது இரண்டு முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது:
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் (AB-HWCs)
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY)
PM-JAY என்பது பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு ஒரு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச மற்றும் விலை மலிவான ஒரு மருத்துவக் காப்பீட்டு வசதியினை வழங்கும் ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.