இந்தியாவின் ஆரஞ்சு பொருளாதாரத்தை (படைப்பாற்றல் பொருளாதாரம்) மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மூன்று முக்கிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
அவை தேசிய AI திறன் மேம்பாட்டு முன்னெடுப்பு, MyWAVES தளம் மற்றும் தொலைக் காட்சிகளில் உள்ளமைக்கப்பட்ட செயற்கைக்கோள் அலைவரிசை சீரமைப்பிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மின்னணு நிகழ்ச்சி வழிகாட்டி (EPG) ஆகியனவாகும்.
தேசிய AI திறன் மேம்பாட்டு முன்னெடுப்பானது கூகுள் மற்றும் யூடியூப் ஆதரவுடன் AVGC (இயங்குபடம், காட்சி விளைவுகள், மின்னணு விளையாட்டு மற்றும் சித்திரக் கதைகள்) துறையில் 15,000 நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
MyWAVES தளமானது பயனர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை (UGC) ஊக்குவிப்பதுடன் பல மொழிகளில் இந்தியப் படைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட EPG ஆனது செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே DD Free Dish சேவையை அணுக அனுமதிப்பதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் அணுகல் மேம்படும்.
ஆரஞ்சு பொருளாதாரம் என்பது ஊடகம், திரைப்படங்கள், மின்னணு விளையாட்டு மற்றும் வடிவமைப்பு போன்ற படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த துறைகளைக் குறிக்கிறது.