இந்தியப் பிரதமர் அவர்கள் குஜராத்தின் கெவாடியாவிலிருந்து முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி மையத்தில் (Lal Bahadur Shastri National Academy of Administration -LBSNAA) பயிற்சி பெற்று வரும் குடிமைப் பணி அதிகாரிகளிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட ”ஆரம்பக்” என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் படிப்பின் ஒரு பகுதியாகும்.
”ஆரம்பக்” என்பது குடிமைப் பணி அதிகாரிகளின் பணித் தொடக்க காலத்தில் துறைகள் மற்றும் அரசுச் சேவைகள் குறித்த பிம்பங்களை (அச்சங்களை) குறைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அகில இந்தியப் பணி, குரூப்-A மத்தியப் பணி மற்றும் அயல்நாட்டுப் பணி அதிகாரிகளை ஒரு பொது அடிப்படைப் பயிற்சிக்காக ஒன்றிணைக்கும் ஒரு முன்னெப்பாகும்.
இந்த ஆண்டு, ஆரம்பக் – 2020 என்ற நிகழ்வின் 2வது பதிப்பானது அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை LBSNAA நிலையத்தில் நடைபெறுகின்றது.
இந்த ஆண்டின் கருத்துரு, “இந்தியாவில் ஆளுகை@100” என்பதாகும்.