TNPSC Thervupettagam

ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கத் தடை மண்டலங்கள்

December 29 , 2025 2 days 61 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது முழு ஆரவல்லி மலைத்தொடரிலும் புதிதாக எந்தவிதமான சுரங்க குத்தகைகளையும் மேற்கொள்ள முழுமையான தடை விதித்துள்ளது.
  • இந்தத் தடையானது, சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சுரங்க நடைமுறைகளைத் தடுப்பதற்கு குஜராத் முதல் தேசியத் தலைநகர் பகுதி (NCR) வரை ஒரே மாதிரியாகப் பொருந்தும்.
  • கூடுதல் சுரங்கத் தடை மற்றும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை அடையாளம் காணும் பணியை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை (ICFRE) கொண்டு உள்ளது.
  • சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கம், உயிரினங்களுக்கு சுற்றுச்சூழலால் வழங்கப்படும் ஆதரவு மற்றும் புத்துயிர்ப்பு  நடவடிக்கைகளை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையிலான மேலாண்மைத் திட்டத்தையும் ICFRE தயாரிக்கும்.
  • தற்போதுள்ள சுரங்க நடவடிக்கைகள் கடுமையான சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் கீழ் மட்டுமே தொடரும்.
  • பாலைவனமாக்கலைத் தடுப்பதற்கும், பல்லுயிர்ப் பெருக்கத்தினை மிகவும் நன்கு பாதுகாப்பதற்கும், நிலத்தடி நீரை மீளேற்றம் செய்யவும் ஆரவல்லியின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்