ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் புதிய தலைவர்
June 29 , 2022 1145 days 595 0
உளவுத்துறை அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) செயலாளராக விளங்கும் சமந்த் குமார் கோயலின் பணி ஒப்பந்தமானது மத்திய அரசினால் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டது.
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு என்பது வெளிநாட்டிலிருந்து வருகின்ற ஆபத்துகளைக் கண்காணிக்கும் ஒரு வெளிப்புற உளவு அமைப்பாகும்.
அண்டை நாடுகளின் செயல்பாடுகள் பற்றிய இரகசியத் தகவல்களை இந்தப் பிரிவு சேகரிக்கிறது.
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவானது நேரடியாக இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படுகிறது.