ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் இந்தியாவின் முன்னேற்றம்
November 12 , 2025 4 days 47 0
இந்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
2010–11 ஆம் ஆண்டில் 60,196 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் ஆனது 2020–21 ஆம் ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களில் மத்திய அரசு சுமார் 43.7 சதவீதப் பங்களிப்பை வழங்குகிற அதே நேரத்தில் தனியார் துறை 36 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது.
2020–21 ஆம் ஆண்டில் 24,326 ஆக இருந்த காப்புரிமைத் தாக்கல்கள் 2024–25 ஆம் ஆண்டில் சுமார் 68,176 ஆக அதிகரித்துள்ளன என்பதோடுஇது உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.