ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் புள்ளி விவரம் மற்றும் குறிகாட்டிகள் 2019-20
May 6 , 2020 1917 days 687 0
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST - Department of Science and Technology) கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைத் தகவல் மையத்தினால் (NSTMIS - National Science and Technology Management Information) 2018 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.
R&D துறையில் (Reseaech & Development) இந்தியாவின் மொத்தச் செலவினம் 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று மடங்காக உயர்ந்து உள்ளது.
ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகள் அதிகரித்ததன் மூலம், உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
அதற்கான இரண்டு முக்கியமான பங்களிப்புகள் DST (63%) மற்றும் மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறை (14%) ஆகியவையாகும்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தலா R&D செலவினமானது தனிநபர் வாங்கும் சக்தி திறன் அடிப்படையில் 2007-08 ஆம் ஆண்டில் 29.2 அமெரிக்க டாலரிலிருந்து 2017-18 ஆம் ஆண்டில் 47.2 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியா 2017-18 ஆம் ஆண்டில் R&D மீது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% அளவிற்குச் செலவிட்டது.
பிரிக்ஸ் நாடுகளிடையே, பிரேசில் 1.3%த்தையும் ரஷ்யக் கூட்டமைப்பு 11%த்தையும் சீனா 2.1%த்தையும் தென் ஆப்பிரிக்கா 0.8%த்தையும் செலவிடுகின்றன.
உலகின் குடியிருப்பாளர் காப்புரிமைத் தாக்கல் நடவடிக்கையில் இந்தியா 9வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின்படி, இந்தியாவின் காப்புரிமை அலுவலகமானது உலகின் காப்புரிமைத் தாக்கல் செய்யும் அலுவலகங்களிடையே 7வது இடத்தில் உள்ளது.
R&D துறையில் பெண்களின் பங்களிப்பானது 13%லிருந்து 24% ஆக அதிகரித்து உள்ளது.