TNPSC Thervupettagam

ஆரிய சமாஜ் திருமணங்கள்

August 8 , 2025 13 days 76 0
  • சட்டவிரோத ஆரிய சமாஜ் திருமணங்கள் குறித்து விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
  • ஆரிய சமாஜ் அமைப்பானது, 1875 ஆம் ஆண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஓர் இந்து மீட்பு இயக்கமாக அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
  • "சுத்தி" (சுத்திகரிப்பு) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறை மூலம், பிற சமயங்கள் அல்லது சித்தாந்தங்களைப் பின்பற்றும் மக்களை அதன் வேதகால, ஓரிறைக் கொள்கை சார்ந்த இந்து மதத்திற்கு மாற்ற என ஆரிய சமாஜம் முயற்சிகளை மேற் கொண்டது.
  • விரைவான திருமணங்களை விரும்பும் தம்பதிகள், குறிப்பாக வெவ்வேறு சாதிகள் அல்லது சமயங்களைச் சேர்ந்தவர்கள், ஆரிய சமாஜத் திருமணங்களை விரும்புகிறார்கள்.
  • 1937 ஆம் ஆண்டில், "சந்தேகங்களை நீக்கவும்" ஆரிய சமாஜத் திருமணங்களின் செல்லுபடித் தன்மையினை அங்கீகரிக்கவும் ஆரிய திருமணச் சரிபார்ப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்தத் திருமணங்கள் குறிப்பிட்ட இந்து சடங்குகளின்படி நடைபெறுகின்றன, ஆனால் மணமகனும், மணமகளும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் தங்களை ஆரிய சமாஜிகள் என்று அறிவிக்க வேண்டும்.
  • இந்த செயல்முறையானது 30 நாட்கள் அளவிலான பொது அறிவிப்பு மற்றும் முறையான நடைமுறைகளை வலியுறுத்துகின்ற 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தை விட விரைவானது மற்றும் எளிமையானது.
  • உத்தரப் பிரதேசத்தில், 2021 ஆம் ஆண்டு சட்டவிரோத மத மாற்றத் தடைச் சட்டத்தின் 6வது பிரிவு, சட்டவிரோதமான அல்லது நடைமுறை ரீதியாக இணங்காத மத மாற்றத்திற்கு முந்தைய எந்தவொரு திருமணத்தையும் செல்லாது என்று அறிவிக்கிறது.
  • இதற்கு, மத மாற்றத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய அறிவிப்புகள் அவசியம் ஆகும், மேலும் இது தன்னார்வ சம்மதத்தைக் காட்டுவதற்கான ஒரு ஆதாரத்தினை முன் வைப்பதற்கான கடமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்துகின்றன.
  • ஆரிய சமாஜத்தின் சுத்தி சடங்குகள் பெரும்பாலும் இந்த சட்டத் தர நிலைகளை பூர்த்தி செய்யாது என்பதால் இது ஆரிய சமாஜ் திருமணங்களுக்கும், மாநிலச் சட்டங்களுக்கும் இடையில் மோதல்களை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்