TNPSC Thervupettagam

ஆரோக்கிய சேது 2.0

July 4 , 2026 4 days 70 0
  • புது தில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா 'ஆரோக்கிய சேது 2.0' மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழான புதிய டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
  • ஆரோக்கிய சேது 2.0 செயலியானது கோவிட்-19 தொடர்பு-தடமறிதல் செயலியிலிருந்து, ABDM உடன் ஒருங்கிணைக்கப்பட்ட தனிப்பட்ட சுகாதாரப் பதிவு (PHR) செயலியாக மாற்றப்பட்டுள்ளது.
  • பயனர்கள் ABHA (ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு) கணக்கை உருவாக்கவும் நிர்வகிக்கவும், ஒப்புதலுடன் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாகப் பகிரவும், மருத்துவமனைப் பதிவுகளை விரைவாக மேற்கொள்ள Scan & Share அம்சத்தைப் பயன்படுத்தவும் இது அனுமதிக்கிறது.
  • டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் காப்பீட்டுத் தொகை கோரல்களை தரப்படுத்துவதற்கான NHCX (தேசிய சுகாதார உரிமை கோரல்கள் பரிமாற்றம்), மருந்துப் பதிவேடு, CLCI மற்றும் BHTS ஆகியவையும் இந்த அறிமுகத்தில் அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, ABDM-இன் கீழ் 90 கோடிக்கும் அதிகமான ABHA கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன; மேலும் 4.8 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார மையங்களும், 9.5 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்களும் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்