TNPSC Thervupettagam

ஆரோக்கிய தாரா 2.0

August 23 , 2021 1459 days 740 0
  • ஆரோக்கிய தாரா 2.0 எனும் நிகழ்வானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • ஆயுஷ்மான் பாரத் – ஜன் ஆரோக்கிய யோஜனாவின் எல்லையை அதிகரிப்பதன் நோக்கில் இது தொடங்கப் பட்டுள்ளது.
  • மேலும் இது ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, சுகாதார அமைச்சர் பின்வரும் முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார். அவை,
    • அதிகார் பத்ரா,
    • ஆயுஷ்மான் மித்ரா மற்றும்
    • அபிநந்தன் பத்ரா
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழான பயனாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு அதிகார் பத்ரா என்பவை வழங்கப் படும்.
  • இந்தப் பத்திரமானது, அந்தப் பயனாளிகள் இலவச மற்றும் கட்டணமில்லாச் சுகாதார சேவைகளைக் கோரும் வகையிலான அவர்களின் உரிமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்கும்.
  • அபிநந்தன் பத்ரா என்பது ஒரு நன்றி குறிப்புஆகும்.
  • இது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • ஆயுஷ்மான் மித்ரா என்பது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளைச் சரிபார்க்கும் செயல்முறையில் குடிமக்களைப் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • மேலும் இது ஆயுஷ்மான் அட்டைகளைப் பெறுவதற்கும் பயனாளிகளுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்