ஆரோக்கியமான நகரங்களுக்கான கூட்டாண்மை உச்சி மாநாடு – 2025
March 27 , 2025 300 days 306 0
இந்த உச்சி மாநாட்டினை ப்ளூம்பெர்க் தொண்டு நிறுவனம், உலக சுகாதார அமைப்பு (WHO), வைட்டல் ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் சிட்டி ஆஃப் பாரிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
ஆரோக்கியமான நகரங்களுக்கான ஒரு கூட்டாண்மை என்பது தொற்றாத நோய்கள் மற்றும் காயங்களைத் தடுக்க என்று செயல்படும் 74 நகரங்களின் உலகளாவிய வலை அமைப்பாகும்.
இந்த ஆண்டு, தொற்றாத நோய்கள் (NCDs) மற்றும் காயங்களைத் தடுப்பதில் சாதனை படைத்ததற்காக, கோர்டோபா (அர்ஜென்டினா), ஃபோர்டலேசா (பிரேசில்) மற்றும் மான்செஸ்டர் (ஐக்கியப் பேரரசு) ஆகியவற்றிற்கு உலக சுகாதார அமைப்பினால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.