மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தன்று (அக்டோபர் 01) இந்தியாவில் ஆரோக்கியமான முதுமையின் பத்தாண்டு காலம் (2020-2030) என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இது மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு வேண்டிய சிறப்பான செயல்பாடுகளுக்காக அரசாங்கங்கள், பொதுச் சமூகம் போன்றவற்றை ஒரே தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மூத்த குடிமக்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது) மொத்த எண்ணிக்கையானது 10.36 கோடியாக உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 8.57% மூத்த குடிமக்களாக உள்ளனர்.