ஆரோக்கியமான வகையில் முதுமையடைதல் குறித்த புதிய ஆய்வு
July 8 , 2025 5 days 44 0
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISc) ஆனது, BHARAT என்ற பெரிய அளவிலான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
BHARAT என்பது ஆரோக்கியமான முறையில் முதுமையடைதல், மீள்தன்மை, மிகவும் பாதகமானச் சூழல் மற்றும் சில மாற்றங்களின் உயிரியல் குறிப்பான்கள் என்பதைக் குறிக்கிறது.
இது வயது முதிர்வு குறித்து ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் நீண்ட ஆயுள்காலம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தியர்களில் வயது முதிர்வு நிலையைப் பாதிக்கும் உடல், மூலக்கூறு மற்றும் சுற்றுச் சூழல் அறிகுறிகளைக் கண்டறிவதே இதன் குறிக்கோள் ஆகும்.
ஆராய்ச்சியாளர்கள் பாரத் அடித்தளம் எனப்படும் இந்தியாவின் மிக முதல் விரிவான வயது முதிர்வு குறித்த தரவுத்தளத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த உயிரியல் குறிப்பான்கள் என்பது உடலில் உள்ள மரபணுக்கள், புரதங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற அளவிடக்கூடிய உயிரியல் குறிகளாகும்.
இந்த ஆய்வானது பல இந்தியர்களை வைட்டமின் D, B12 அல்லது கொழுப்பு குறைபாடு உள்ளவர்கள் என்று குறிப்பிடும் மேற்கத்தியத் தரநிலைகளைச் சவால் செய்ய உதவும்.
இந்தியர்களுக்கு ஏற்றவாறு நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மருந்து வடிவமைப்பை மேம்படுத்தவும் இந்த தரவுத் தளம் உதவும்.