TNPSC Thervupettagam

ஆரோக்ய வன் முன்னெடுப்பு

April 11 , 2026 15 hrs 0 min 43 0
  • நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மருத்துவ குணமுடைய மரங்களை நடுவதற்காக 'ஆரோக்ய வன்' என்ற முன்னெடுப்பை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது.
  • பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்திறனை மேம்படுத்தும் வகையில், மருத்துவ தாவரங்களைக் கொண்ட பசுமை வழித்தடங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் முதல் கட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 17 நிலப்பரப்புகளில் (62.8 ஹெக்டேர்) சுமார் 67,000 மரங்கள் நடப்பட உள்ளன.
  • வேளாண்-பருவநிலை தகுதியின் அடிப்படையில் வேம்பு, நெல்லி, நாவல் போன்ற சுமார் 36 வகையான மரக்கன்றுகள் நடப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்