TNPSC Thervupettagam

ஆரோக்யா மைத்ரி பெட்டகங்கள்

September 8 , 2023 1010 days 549 0
  • 72 கன சதுரப் பெட்டகங்களில் நிரப்பப்பட்ட, விமானத்தில் சுமந்து செல்லக் கூடிய உலகின் முதல் பேரிடர் மருத்துவமனையை இந்தியா உருவாக்கியுள்ளது.
  • இது ‘ஆரோக்ய மைத்ரி பெட்டகங்கள்’ என அழைக்கப்படுகிறது.
  • பாரத் சஹ்யோக் ஹிதா மற்றும் மைத்ரி சுகாதார முன்னெடுப்பின் (BHISHM) கீழ் இந்தியா இந்தத் தயாரிப்பினை உருவாக்கியுள்ளது.
  • இதில் மூன்று சட்டகங்கள் உள்ள நிலையில் ஒவ்வொன்றும் 12 சிறிய பெட்டகங்களை உள்ளடக்கியுள்ளன.
  • 40 துப்பாக்கிக் குண்டு காயங்கள், 25 பெரிய அளவிலான இரத்தக் கசிவுகள், 25 பெரிய தீக்காயங்கள், சுமார் 10 தலை காயங்கள், நீண்ட அளவிலான மூட்டு முறிவுகள், முதுகெலும்பு காயங்கள், மார்பு காயங்கள் மற்றும் முதுகெலும்பு முறிவுகள் உட்பட பல கடுமையான காயங்களை கையாளும் வகையிலான பல்வேறு சாதனங்களை இந்தப் பெட்டகங்கள் கொண்டிருக்கும்.
  • இதில் ஒவ்வொரு பெட்டகமும் சுமார் 20 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளதனால், இவற்றை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எளிமையாக எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்