December 25 , 2025
17 days
85
- ஆரோவில் அறக்கட்டளைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) என்ற அந்தஸ்து வழங்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
- புதுச்சேரியில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை, 1988 ஆம் ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
- இந்த அந்தஸ்தினைப் பரிந்துரைத்தக் குழுவின் தலைவர் திக்விஜய் சிங் ஆவார்.
- 1966 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ பல தீர்மானங்கள் மூலம் ஆரோவில் அறக் கட்டளையை ஆதரித்து வருகிறது.
- இந்த அறக்கட்டளை இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Post Views:
85