சுங்கச் சாவடி ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி ஆர்வங்களை ஆதரிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆரோஹன் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இந்தத் திட்டமானது புது டெல்லியில் உள்ள வெர்டிஸ் உள்கட்டமைப்பு அறக் கட்டளையுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
ஆரோஹன் திட்டமானது, நிதி சார் தடைகளை நீக்கி, நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்விக்கான சமமான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெண்கள், முதல் தலைமுறை கற்பவர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் ஆனது, SMEC அறக்கட்டளையின் முன்னெடுப்பான பாரத் கேர்ஸ் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமல்படுத்தப் படும் முதல் கட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது 11 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 500 மாணவர்களுக்கு ஆண்டிற்கு 12,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும்.
இது உயர்கல்வியைத் தொடரும் 50 மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாய் உதவித் தொகையுடன் ஆதரவளிக்கும்.