கிரீன்லாந்து தொடர்பான பதட்டங்களுக்குப் பிறகு ஆர்க்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) "ஆர்க்டிக் சென்ட்ரி" திட்டத்தினைத் தொடங்கியது.
இந்தத் திட்டம் ஆர்க்டிக்கில் உள்ள நேட்டோ நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற நாடுகள் படைகளையும் பாதுகாப்பு ஆதரவையும் வழங்குகின்றன.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் ஆர்வம் காரணமாக ஆர்க்டிக்கில் உள்ள பாதுகாப்பு கவலைகள் குறித்து இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதிக ஒத்துழைப்பு மற்றும் நிரந்தரப் பாதுகாப்புப் படை குறித்தும் நேட்டோ நாடுகள் விவாதித்து வருகின்றன.