தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) ஆனது 2025 ஆம் ஆண்டு ஆர்டிக் பெருங்கடல் அறிக்கையை வெளியிட்டது.
ஆர்டிக் பகுதி புவிக் கிரகத்தின் மற்ற பகுதிகளை விட மிக வேகமாக வெப்பமடைந்து வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது.
1900 முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆர்டிக் பகுதியின் மேற்பரப்பு காற்று வெப்பநிலைப் பதிவில் மிக அதிகமாக இருந்தது.
கடந்த பத்து ஆண்டுகள் ஆர்டிக் பகுதியில் இது வரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான தசாப்தமாகும்.
கீழ் மட்டநிலை அட்சரேகைகளிலிருந்து வரும் வெதுவெதுப்பான நீர் மற்றும் உயிரினங்களின் வருகையைக் குறிக்கும் அட்லாண்டிக் மயமாதல், கடல் பனி உருகுவதற்கும் கடல் சுழற்சியைப் பாதிப்பதற்கும் காரணமாகிறது.
உருகும் நிரந்தர உறைபனி தண்ணீரில் இரும்புத் தாதுவினைக் கசிய விட்டதனால், ஆர்டிக் அலாஸ்காவில் உள்ள ஆறுகள் ஆரஞ்சு நிறமாக மாறிவிட்டன, இது மீன் மற்றும் வட்டார நீர் விநியோகத்தைப் பாதித்தது.
1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஆர்க்டிக் பகுதியின் பசுமையாக்கம் துந்த்ரா தாவரங்களை மிக அதிகரித்துள்ளது என்பதோடு இது நிலப்பரப்புகள், வன விலங்குகள் மற்றும் நிரந்தர உறைபனி நிலைமைகளைப் பாதிக்கிறது.
ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்கரையில் உள்ள வடக்கு கடல் பாதை கடல் பனி உருகும் போது கப்பல் போக்குவரத்துக்குப் பெருகிய முறையில் பயன்படுத்தக் கூடியதாகி வருகிறது.