April 4 , 2026
2 days
70
- நாசா 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, மனிதர்களுடன் கூடிய முதல் நிலவுப் பயணமான ஆர்டெமிஸ் II-க்கு தயாராகி வருகிறது.
- 1968-1972 காலக் கட்டத்தில் நாசாவால் நடத்தப்பட்ட அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு நிலவுக்குச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும்.
- இந்தப் பயணத்திற்கு விண்வெளி ஏவுதல் அமைப்பு(SLS) என்ற 32 மாடி உயர கனரக ஏவு வாகனம் மற்றும் ஓரியன் விண்கலம் பயன்படுத்தப்படும்.
- இந்த விண்கலம் முதலில் பூமியைச் சுற்றி வரும், பின்னர் நிலவில் தரையிறங்காமல் நிலவைச் சுற்றிப் பறந்து ஆய்வு செய்யும்.
- சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணம், பசிபிக் பெருங்கடலில் விண்கலம் விழுந்து நிறைவடையும்.
- இது விண்கலத்தின் முக்கிய அமைப்புகளைச் சோதிப்பதோடு, ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் எதிர்கால மனித நிலவுப் பயணங்களுக்கு அடித்தளமாக அமையும்.

Post Views:
70