TNPSC Thervupettagam
June 13 , 2026 15 hrs 0 min 29 0
  • ஆர்ட்டெமிஸ் III திட்டத்திற்கான நான்கு பேர் கொண்ட குழுவை நாசா அறிவித்துள்ளது.
  • ஆர்ட்டெமிஸ் III என்பது ஆழ் விண்வெளி மற்றும் சந்திரனை ஆராய்வதற்கான நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இத்திட்டம் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்நான்கு பேர் கொண்ட குழுவில் ராண்டி ப்ரெஸ்னிக் (அமெரிக்கா), லூகா பர்மிடானோ (இத்தாலி), ஆண்ட்ரே டக்ளஸ் (அமெரிக்கா) மற்றும் ஃபிராங்க் ரூபியோ (அமெரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • எதிர்கால சந்திரப் பயணங்களுக்கு முன்னதாக இத்திட்டம் சந்திப்பு மற்றும் இணைதல் செயல்பாடுகளைச் சோதிக்கும்.
  • திருத்தப்பட்ட ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் முதல் மனிதனை நிலவில் தரையிறக்கும் பணி தற்போது 2028 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் IV திட்டத்திற்காக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்