TNPSC Thervupettagam

ஆர்பிட்எய்டு நிறுவனத்தின் ஆயுல்சாட்

January 17 , 2026 5 days 48 0
  • சென்னையில் உள்ள ஆர்பிட்எய்ட் ஏரோஸ்பேஸ், சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களின் எரிபொருள் நிரப்புவதை மேற்கொள்ள இஸ்ரோவின் PSLV-C62 ஏவு கலத்தில் ஆயுல்சாட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
  • ஆயுல்சாட் என்பது விண்வெளியில் எரிபொருள், ஆற்றல் மற்றும் தரவை மாற்ற வடிவமைக்கப்பட்ட 25 கிலோ எடை கொண்ட டேங்கர்/கொள்கலன் செயற்கைக்கோள் ஆகும்.
  • இது எதிர்காலத்தில் ஒரு செயற்கைக் கோளில் இருந்து மற்றொரு செயற்கைக் கோளுக்கு எரிபொருள் நிரப்புதலுக்கு SIDRP (இணைப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் தளத்திற்கான நிலையான இடைமுகம்) அமைப்பினைப் பயன்படுத்துகிறது.
  • இந்தப் பணி செயற்கைக்கோள் ஆயுள் நீட்டிப்பை ஆதரிக்கும் மற்றும் விண்வெளி குப்பைகளைக் குறைக்கும்.
  • 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு சேஸர் செயற்கைக்கோள் உண்மையான இணைப்பு மற்றும் எரிபொருள் நிரப்புதலைச் செய்வதற்கான இலக்காக இது செயல் படும்.
  • இந்தத் திட்டம் இந்தியாவின் குப்பைகள் இல்லாத விண்வெளிப் பயணம் 2030 திட்டத்தினை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்