முதல் உலகப் போரின் போது ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இனப்படுகொலை எனக் கூறுகிறார்.
1915 ஆம் ஆண்டில் ஆர்மேனியர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை இவ்வகையில் விவரித்த முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார்.
துருக்கி நாடானது, அந்த அட்டுழியங்களை ஒப்புக் கொண்டாலும் “இனப்படுகொலை” என்று அதனைக் கூறுவதை ஏற்க மறுக்கிறது.
பின்னணி
1915 ஆம் ஆண்டில் காகசஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஓட்டமான் பேரரசானது ரஷ்யர்களிடம் ஒரு அவமானமிக்க தோல்வியைச் சந்தித்தது.
அப்போது ஆர்மேனியர்கள் தேசத்துரோகம் செய்ததாக துருக்கியர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே ஆர்மேனிய வீரர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் தூக்கிலிடப் பட்டனர்.
குழந்தைகள் உட்பட நூற்றாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் சிரியாவின் பாலைவனத்திற்கு வலுக் கட்டாயமாக இடம் மாற்றப்பட்டனர்.
இந்தப் பயணத்தின் போது பலர் உயிரிழந்தனர், மேலும் பலர் அந்தப் பாலைவனத்திலுள்ள சித்திரவதை முகாம்களை அடைந்த பின்னர் உயிரிழந்தனர்.
மொத்தத்தில் 1915 முதல் 1922 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் நடைபெற்ற முதல் உலகப் போரில் ஆயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொலை, பசி மற்றும் நோயினால் அழிந்து போயினர்.